நாமக்கல் மாரியம்மன் கோவில் தூக்குத்தேர் திருவிழா
ADDED :3421 days ago
நாமக்கல்: நாமக்கல்லில், தூக்குத்தேரில் எழுந்தருளிய மாரியம்மன், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல்லில் உள்ள, பலப்பட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. மாலையில், பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று காலை, திருத்தேரில் எழுந்தருளிய மாரியம்மனை, பக்தர்கள் தூக்குத்தேரில் தூக்கிக் கொண்டு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலை என, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, இறுதியில் கோவிலை அடைந்தது. வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்தனர்.