உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோட்டை கோவில் தேர் திருவிழா துவங்கியது

செஞ்சி கோட்டை கோவில் தேர் திருவிழா துவங்கியது

செஞ்சி: செஞ்சி கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சி கோட்டை ராஜகிரி  மலைமீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்  துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு  ஸ்ரீகமலக்கன்னியம்மன், ஸ்ரீமகா மாரியம்மன், ராஜகாளியம்மன், கோட்டை வீரனுக்கு சி றப்பு அபிஷேகம் நடந்தது.  காலை 9.30 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கணபதி, லட்சுமி மற்றும் 108 திரவிய ஹோமம் நடந்தது. 10.30  மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து காப்பு அணிவித்தலும், இரவு சாமி வீதி உலாவும் நடந்தது. இதில் கோவில் அற ங்காவலர் அரங்க ஏழுமலை, உபயதாரர்கள், விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இன்று முதல் 1ம் தேதி வரை தினமும்  சிறப்பு, அபிஷேக, அலங்காரமும் வழிபாடும் நடத்த உள்ளனர். 31ம் தேதி காலை 6 மணிக்கு 108 பால் குடம் ஊர்வலமும், 10 மணிக்கு மகா மாரிய ம்மன் கோவிலில் சாகை வார்த்தலும், பகல் 1.30 மணிக்கு திருத்தேர் வடம்  பிடித்தலும் நடக்க உள்ளது. வரும் 1ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள்  நீராட்டும், மாலை 4 மணிக்கு காப்பு களைதலும் நடக்க உள்ளது. ராஜகிரிக்கு இலவசம் கமலக்கன்னியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  செஞ்சி கோட்டை ராஜகிரி கோட்டைக்கு பொது மக்கள் சென்று வர நேற்று முதல் வரும் 1ம் தேதி வரை  இந்திய தொல்லியல் துறையினர் இலவச  அனுமதி வழங்கி உள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !