முடசல்ஓடை சுப்ரமணியர் கோவிலில் வைகாசி விழா!
ADDED :3420 days ago
கிள்ளை: கிள்ளை அருகே முடசல்ஓடை வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவில் 14ம் ஆண்டு வைகாசி விசாக விழா நடந்தது. இந்த ஆண்டு 14ம் ஆண்டு விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி கொடி ஏற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் 20ம் தேதி காவடி உற்வமும், 21ம் தேதி காலை சுவாமி புறப்பாடும், மதியம் பால்குடம் ஊர்வலமும் நடந்தது.