சஞ்சீவி நகர் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :3535 days ago
புதுச்சேரி: சஞ்சிவி நகர் திரவுபதியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது. சஞ்சீவி நகர் விநாயகர் செங்கழுநீர் அம்மன், திரவுபதியம்மன், கெங்கையம்மன் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஊரணி பொங்கல், இரவு கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை மாரியம்மன் வீதி உலா, பகல் 12:00 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் உடலில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று 25ம் தேதி காலை 10:00 மகாபாரத உபன்யாசம், மாலை அரக்கு மாளிகை எரித்தல், கும்பம் கொட்டுதல் நடக்கிறது. 27ம் தேதி, அர்ச்சுனன் திரவுபதியம்மன் திருமணம் நடக்கிறது. 28ம் தேதி அர்ச்சுனன் தபசு ஏறுதல், 30ம் தேதி மாலை 4:00 மணிக்கு தீமிதி திருவிழா, 31ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.