உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹயக்ரீவ பண்டி பலகாரம்!

ஹயக்ரீவ பண்டி பலகாரம்!

குதிரை முகமும், மனித உடலும் கொண்ட ஹயக்ரீவர் கல்விக் கடவுளாக விளங்குகிறார். இதனால் இவருக்கு வித்யாராஜன் என்ற சிறப்பு  பெயருண்டு. வித்யை என்றால் கல்வி. வித்யை என்பது புத்தக படிப்பு மட்டுமல்ல. எல்லா வகை கல்வியும் இதில் அடங்கும். ஹயக்ரீவரை  வழிபட்ட வாதிராஜர் என்ற பக்தர் தினமும் கடலைப்பருப்பு, வெல்லம், நெய், தேங்காய் சேர்த்து செய்த ஹயக்ரீவ பண்டி என்னும் பலகாரத்தை  செய்து, ஒரு தாம்பாளத்தில் வைத்து படைப்பார். அதை தலையில் சுமந்து நிற்க, ஹயக்ரீவர் குதிரை வடிவில் நேரில் தோன்றி முன்கால்களை வாதிராஜரின் தோள் மீது வைத்து சாப்பிட்டு செல்வார். ஹயக்ரீவர் சாப்பிட்ட மீதியை வாதிராஜர் பிரசாதமாக ஏற்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !