தாத்தாவின் நேர்மை
ADDED :3812 days ago
வாரியாரின் தாத்தாவான சாமியண்ணா ஒருமுறை நண்பர்களுடன், வேலூர் மாவட்டம், காங்கேயநல்லூரில் இருந்து (83 கி.மீ.) நடந்து திருவண்ணாமலை சென்றார். அந்த சமயம் வேலூரைச் சுற்றி காலரா பரவியிருந்தது.திருவண்ணாமலையில் நோய் பரவாமல் இருக்க, நோய் பரவிய ஊர்க்காரர்கள் திருவண்ணாமலைக்குள் நுழையக்கூடாதென, சுகாதாரத்துறை அனுமதி மறுத்தது. காங்கேயநல்லூரில் இருந்து வந்தவர்களோ, தாங்கள் அரக்கோணத்தில் இருந்து வருவதாக பொய் சொல்லி திருவண்ணாமலைக்குச் சென்றனர். ஆனால், பெரியவர் மட்டும், நேர்மையுடன் நான் காங்கேயநல்லூர்க்காரன் என்று சொன்னார். அந்த இடத்திலேயே, இறைவனை வணங்கி விட்டு ஊர் திரும்பியது குறிப்பிடத்தக்கது.