உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.கே.பேட்டை பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் காலையில் சூரியன், மாலையில் சந்திரன்

ஆர்.கே.பேட்டை பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் காலையில் சூரியன், மாலையில் சந்திரன்

ஆர்.கே.பேட்டை: சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், ஜூன்.,5ம் தேதி சூரிய, சந்திர பிரபை வாகனங்களில், சுவாமி எழுந்தருளினார்.

ஆர்.கே.பேட்டை, பிராமணர் தெருவில், சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. வெள்ளிக்கிழமை, காலை, 7:30 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து, ஸ்தாபன திருமஞ்சனமும், மாலை, 5:00 மணிக்கு, ஊஞ்சல் சேவை உற்சவமும் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் சுவாமி உலா எழுந்தருளினார்.
மறுநாள் சிம்ம வாகனத்தில், சுவாமி உலா வந்தார். ஜூன்.,5ம் தேதி காலை, சூரிய பிரபையிலும், மாலையில், சந்திர பிரபையிலும் சுவாமி எழுந்தருளினார். இன்று கருட சேவை நடக்கிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) தேர் திருவிழாவும், 9ல், சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !