உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதங்களின் தேன் கிண்ணம்!

வேதங்களின் தேன் கிண்ணம்!

சபரிமலை ஐயப்பன் சன்னிதி நுழைவு பகுதியில் ‘தத்வமஸி’ என்னும் வேத வாக்கியம் உள்ளது. சாம வேதத்தின் சாந்தோக்ய உபநிடதத்தில் இடம் பெற்றுள்ள இந்த வாக்கியத்தின் பொருள் ‘நீ அதுவாகவே (கடவுளாகவே) இருக்கிறாய்’ என்பதாகும். மனிதன் தன்னைத் தெய்வமாக உணர வேண்டும் என்பது இதன் உட்பொருள். கடவுள் ஒருவரே என்றும் அவரே மகாவிஷ்ணு என்றும் சாமவேதம் கூறுகிறது. அவருக்குரிய மந்திரமான ‘ஓம் நமோ நாராயணா’ என்பது பற்றி சிறப்பாக விவரிக்கிறது. இதை ஜெபிப்பவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம், நல்ல புத்தி ஆகியவற்றைப் பெறுவதோடு சொர்க்க வாழ்வையும் அடைவான் என்று கூறுகிறது.‘தேனால் நிரப்பப்பட்ட பாத்திரங்கள் போல விளங்கும் வேதப் பாடல்களைப் பாட வேண்டும்’ என்றும் சாமவேதம் கூறுகிறது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நால்வேதங்களில் சந்தநயம் மிக்க இந்த வேதத்தை ‘தேன் கிண்ணம்’ என்று கூறுவர். பகவத்கீதையில் கிருஷ்ணர் ‘வேதானாம் சாம வேதோ அஸ்மி’ (வேதங்களில் நான் சாமவேதம்) என்று போற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !