உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவையற்றதை பேசாதீர்!

தேவையற்றதை பேசாதீர்!

ஒருவர் பள்ளிவாசல் வந்து (வீண் பேச்சு) அதிகமாகப் பேசுபவராகில், ‘இறை நேசரே! பேசாதீர்’ என்று வானவர்கள் கூறுகின்றனர். இன்னும் அவர் அதிகமாகப் பேசினால் ‘அல்லாஹ்வின் சாபம் உன் மீது உண்டாவதாக’ என கூறுகின்றனர். இன்னும் அவர் சப்தமிட்டுப் பேசினால் ‘அல்லாஹ்வின் சாபம் உன் மீது உண்டாவதாக! மவுனமாக இரு!’ என்று கூறுவார்கள். இறை இல்லத்தில் ஒருவன் தொழுதால் வானவர்கள் அவனுக்காக, தொழுகை இடத்தில் அவன் இருக்கும் காலமெல்லாம் துஆ செய்கிறார்கள். ‘யா அல்லாஹ்! இவர் மீது கருணை காட்டு! யா அல்லாஹ்! இவருக்கு அருள் செய்!’ என்று கேட்பார்கள். அவன் தொழுகையை எதிர்நோக்கி இருக்கும் காலமெல்லாம் இது நீடித்து இருக்கும். இந்த நேரத்தில் நபிகள் நாயகம் கூறும் ஒரு கருத்தைக் கேளுங்கள். “ஒரு காலம் வரும். அக்கால மக்கள் பள்ளிவாசல்களில் பேசும் பேச்சுகள் இந்த உலகத்தைப் பற்றியதாக இருக்கும். அவர்களுடன் நீங்கள் உட்காராதீர்கள். ஏனென்றால் அவர்களுடைய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. உலகம் அழிவுநாளில் (உலகத்திலுள்ள) எல்லாப் பள்ளிவாசல்களும் (மக்காவின்) கஃபாவுடன் இழுத்து இணைக்கப்பட்டு சொர்க்கத்துக்கு உயர்த்தப்பட்டு பாதுகாக்கப்படும்,” என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !