ஆயுள் முழுவதும் ஆனந்தமாக வாழ வேண்டுமா?
ஆரோக்கியம், செல்வ வளம் இரண்டும் ஒருவருக்கு கிடைத்து விட்டால் ஆயுள் முழுவதும் ஆனந்தம் தான். இதை அனைவருக்கும் வழங்கும் அண்ணாமலையாரை ஒருநாளும் நான் மறக்க மாட்டேன் என திருநாவுக்கரசர் இந்த தேவாரப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். தினமும் மாலையில் விளக்கேற்றியதும் படித்தால் ஆனந்தம் வீட்டில் நிலைத்திருக்கும்.
வட்டனைம் மதிசூடியை வானவர்
சிட்டனைத் திருவண்ணா மலையனை
இட்டனை இகழ்ந்தார் புர மூன்றையும்
அட்டனை அடியேன் மறந்து உய்வனோ
வானனைம் மதி சூடிய மைந்தனைத்
தேனனைத் திருவண்ணா மலையனை
ஏனனை இகழ்ந்தார் புர மூன்றெய்த
ஆனனை அடியேன் மறந்து உய்வனோ.
மத்தனைம் மதயானை உரித்த எம்
சித்தனைத் திருவண்ணா மலையனை
முத்தனைம் முனிந்தார் புர மூன்றெய்த
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.
காற்றனைக் கலக்கும் வினை போயறத்
தேற்றனைத் திருவண்ணா மலையனைக்
கூற்றனைக் கொடியார் புர மூன்றெய்த
ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ.
மின்னனை வினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்னனைத் திருவண்ணா மலையனை
என்னனை இகழ்ந்தார் புர மூன்றெய்த
அன்னை அடியேன் மறந்து உய்வனோ.
மன்றனைம் மதியாதவன் வேள்வி மேல்
சென்றனைத் திருவண்ணா மலையனை
வென்றனை வெகுண்டார் புற மூன்றையும்
கொன்றனைக் கொடியேன் மறந்து உய்வனோ.
வீரனை விடம் உண்டனை விண்ணவர்
தீரனைத் திருவண்ணா மலையனை
ஊரனை உணரார் புர மூன்றுஎய்த
ஆரனை அடியேன் மறந்து உய்வனோ.
கருவினைக் கடல் வாய்விடம் உண்டஎம்
திருவினைத் திருவண்ணா மலையனை
உருவினை உணரார் புர மூன்றெய்த
அருவினை அடியேன் மறந்து உய்வனோ.
அருத்தனை அரவை ஐந்தலை நாகத்தைத்
திருத்தனைத் திருவண்ணா மலையனைக்
கருத்தனைக் கடியார் புர மூன்று எய்த
அருத்தனை அடியேன் மறந்து உய்வனோ.
அரக்கனை அலற அவ்விரல் ஊன்றிய
திருத்தனைத் திருவண்ணா மலையனை
இருக்கமாய் என் உடலுறு நோய்களைத்
துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ.