குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :5107 days ago
கடலூர் : கடலூர் குட்டியாண்டவர் கோவில் கும்பாபிஷேக 8ம் ஆண்டு நிறைவையொட்டி நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. கடலூர், செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரையில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலின் கும்பாபிஷேக 8ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 9 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்கு பூஜை, பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 11 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு 108 சங்காபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது.