உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் பக்தர்கள் பாதுகாப்பிற்கு ஆளில்லா விமானம்!

அமர்நாத் பக்தர்கள் பாதுகாப்பிற்கு ஆளில்லா விமானம்!

ஜம்மு : அமர்நாத் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக டுரோன் விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 2-ந் தேதி தொடங்கியது. வருகிற ஆகஸ்டு 18-ந் தேதி வரை 48 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறுகிறது. இதுவரை சுமார் 56 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமர்நாத் செல்லும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதாக புலனாய்வு துறை அமைப்புகள் ஏற்கனவே எச்சரித்து உள்ளன. இதனால் பக்தர்கள் தங்கும் முகாம்கள் மற்றும் அவர்கள் செல்லும் பாதையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காஷ்மீர் மாநில போலீசாருடன் மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். பக்தர்கள் தங்கிச் செல்லும் முகாமை சுற்றி பேட்டரியின் மூலம் இயங்கும் டுரோன் குட்டி விமானங்கள் பறந்தபடி 24 மணி நேரமும் கண்காணிக்கின்றன. முகாமை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த குட்டி விமானங்களால் கண்காணிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !