உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காடு கோயிலில் தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடினர்!

திருவெண்காடு கோயிலில் தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடினர்!

மயிலாடுதுறை: தட்சியாண புண்ணியகாலத்தின் தொடக்கமான ஆடி மாத முதல் நாளில் சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. நாகை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோயிலில் உள்ள ருத்ர பாதத்தில் முதாதையர் நினைவாக தர்பணம் செய்து வழிபட்டால் 21 குடும்ப தலைமுறைகளில் நாம் செய்த பாவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் சிவனின் முக்கண்ணிலிருந்த முன்று பொறிகள் விழந்து தோன்றியதாக கருதபடும் அக்னி,சந்திரன் மற்றும் சூரியன் உள்ளிட்ட முக்குளங்கள் இந்த கோயிலில் தோன்றியதாக வரலாறுகள் கூறுகின்றன.

இந்த குளங்களில் நீராடி வழிபட்டால் பல்வேறு சிறப்புகளை பெறலாம் என்பது ஐதீகம்.மாதந்தோறும் அமாவாசை மற்றும் தமிழ்மாத பிறப்பன்று அஸ்திரதேவர் முக்குளங்களில் தீர்த்தம் கொடுப்பது வழக்கம். தட்சியாண புண்ணியகாலத்தின் தொடக்கமான ஆடி மாத முதல் நாளில், காலை அஸ்திர தேவரை முன்று குளங்களுக்கும் மேள,தாளம் முழங்கிட ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு,அவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் முன்றுக்குளங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி முருகையன், பேஸ்கார் திருஞானம், ஆலய அர்ச்சகர்கள் ராஜாப்பா, வினோத் மற்றும் 63 நாயன்மார்கள் வழிபாட்டு மன்றத்தலைவர் பாபு, இணைச்செயலாளர் ராஜேஸ்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !