உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண்கள்

பவானியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண்கள்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஸ்ரீபவானியம்மன் கோவிலுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையை ஒட்டி திரளான பெண்கள் பாதயாத்திரையாக சென்று அம்மனை வழிபட்டனர். ஆடி மாதம் பிறந்தாலே அம்மன் கோவில்களில் விழாக்கோலம் பூண்டு விடும். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, ஊத்துக்கோட்டை, மாம்பாக்கம், பாலவாக்கம், தண்டலம், கண்ணன்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் கூட்டம், கூட்டமாக பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். விடியற்காலை, 04:00 மணி முதல் நடக்க துவங்கிய பக்தர்கள் கோவிலை அடைந்து அம்மனை தரிசனம் செய்தனர். சிலர் வேப்ப இலை ஆடை அணிந்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !