உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருளஞ்சேரி ஆரியம்மனுக்கு 31ல் ஆடித் திருவிழா

இருளஞ்சேரி ஆரியம்மனுக்கு 31ல் ஆடித் திருவிழா

இருளஞ்சேரி: இருளஞ்சேரி ஆரியம்மன் கோவிலில், வரும், 31ம் தேதி, ஆடித் திருவிழா நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ளது இருளஞ்சேரி கிராமம். இங்குள்ள ஆரியம்மன் கோவிலில், வரும், 31ம் தேதி, ஆடி திருவிழா நடைபெற உள்ளது. அன்று, காலை, 6:00 மணிக்கு மேல், 7:00 மணிக்குள், மாரியம்மனுக்கு அபிஷேகமும், காலை, 10:30 மணிக்கு அம்மனின் குடம் வீதிவுலாவும், 11:00 மணிக்கு, கூழ்வார்த்தலும்
நடைபெறும். பின், மாலை, 3:00 மணிக்கு, பொங்கல் வைத்தலும், மாலை, 6:30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு, 8:00 மணிக்கு தீபஜோதி ஏந்தி குடத்துடன் கிராம எல்லையில், தெய்வ தெப்போற்சவமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !