ஜெனகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3400 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் நேற்று ஆடி வெள்ளியையொட்டி நேர்த்திக்கடனாக பெண்கள் கூழ் ஊற்றி பரிகார பூஜை செய்தனர். சிவாச்சாரியார் கணேசன் பக்தர்கள் தந்த அபிஷேக, பூஜை பொருட்களை அம்மனுக்கு செலுத்தினார். நெய் மாவிளக்கேற்றி சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். நிர்வாக அதிகாரி லதா, தலைமை கணக்கர் பூபதி ஏற்பாடுகளை செய்தனர்.