உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா

முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா

மங்கலம்பேட்டை:  கோ.பூவனுார் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில் ஏராளமானோர் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  ஆடி மாதம் முதல் வெள்ளியை ஒட்டி, மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. காலை  7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.  மாலை 3:00 மணியளவில் நடந்த விழாவில்  ஏராளமானோர் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !