வீரவாழ்வு என்பது.....?
ADDED :3757 days ago
சிற்றின்பச் சிந்தனைகள் என்ற தூக்குக் கயிறுகள் தரமற்ற பத்திரிகைகளாகவும், திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் இளைய தலைமுறையினரைச் சுற்றி நாலாபுறமும் தொங்கிக்கொண்டிருக்கும் காலம் இது. சிற்றின்பம் நிலையானது என்ற ஒரு மாயையில் நம்மில் பலரும் வாழ்கிறோம். ஆனால் காம இச்சையிலிருந்து விடுபட்ட வாழ்க்கையே வீர வாழ்க்கை. இந்தக் கருத்துக்கு அரண் செய்வது போல் ஐம்புலன் தன்னை வென்றான்தன் வீரமே வீரமாம் என்று, முத்தமிழ் வித்தகி அருந்தமிழ் ஔவையின் அமுதவாக்கும் விளங்குகிறது. பிரம்மச்சரியத்தினால் அமைதியாகவும் எளிமையாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் காரியங்களைச் செய்ய முடியும்.