பிரம்மச்சாரி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?
ADDED :3757 days ago
வேதம் பயிலும் மாணவன், நியமங்களை உடையவன், மனக்கட்டுப்பாடு பழகுபவன், வேத மந்திரங்களாகிய சிந்தனைகளில் சஞ்சாரம் செய்பவன், புலனடக்கம் உடையவன், நற்பண்புகளைப் பெற்றவன் என்ற கருத்தில்தான் பண்டை நாளில் பிரம்மச்சாரி என்ற சொல் வழக்கில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் கல்யாணமாகாதவன் என்ற கருத்திலேயே பெரும்பாலும் பிரம்மச்சாரி என்ற சொல்லைப் பயன்படுத்தும் வழக்கம் வந்து விட்டது.