உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகான்கள் என்பவர்கள் யார்?

மகான்கள் என்பவர்கள் யார்?

இறைவனை உணர்த்தும் மைல் கற்கள் போலவும், நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகவும், இறைவனை அனுபூதியில் உணர்ந்த மகான்கள் விளங்குகிறார்கள். அவர்கள் மண்ணில் நல்ல வண்ணம் தாங்களும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்கிறார்கள். அவர்களின் வழியைப் பின்பற்றி, தூய உள்ளத்துடன் நாம் இறைவனைச் சிக்கெனப்பிடிக்க வேண்டும். பரிபூரணத்தை நோக்கிக் கைகளை நீட்ட வேண்டும். இறைவனையே நினைந்து நினைந்து இறைவன், மயமானவர்கள் மகான்கள். அவர்களின் வாழ்க்கையை ஒரு சாதகனின் கண்ணோட்டத்துடன் நான் படிக்க வேண்டும். இல்லாவிடில், அதிலிருந்து கிடைக்க வேண்டிய பெரிய படிப்பினைகள் நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும். மனித வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம் என்று சொல்லலாம். சாலை விதிகளைப் பின் பற்றுவது பிரயாணத்தைச் சரியாக்குகிறது. அது போல், நமது வாழ்க்கைப் பயணத்திற்குரிய விதிகளாக மகான்களின் வாழ்வும் வாக்கும் விளங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !