உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் மாரியம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா

திருப்பூர் மாரியம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா

திருப்பூர்: மாரியம்மனுக்கு மஞ்சள் பூசும் விழாவை நடத்த இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. திருப்பூர் கிழக்கு ஒன்றிய இந்து முன்னணி, செயற்குழு கூட்டம், ராக்கியாபாளையம் அலுவலகத்தில் நடந்தது. செப்.,5 முதல் 8ம் தேதி வரை நடைபெறும், விநாயகர் சதுர்த்தி விழாவை, 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்துவது, திருவிளக்கு பூஜை, ஆன்மீக சொற்பொழிவு, விளையாட்டு, கோலப்போட்டி, அன்னதானம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. விழாவில், ஆக.,5ம் தேதி, காட்டுப்பாளையம், புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் மற்றும் அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுதாகரன், ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்குமார், பாலு, சந்துரு, அருண்குமார், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !