விருதுநகர்: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல மீ்ண்டும் அனுமதி
ADDED :3402 days ago
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்திருப்பதால் பக்தர்கள் செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.