வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி அருகே உள்ள வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். முதல் நாள் பொங்கல் வைத்து கரகம் எடுத்து வந்தனர். அமாவாசையன்று பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாரா தனை நடந்தது. இரவு 11 மணிக்கு அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா நடந்தது. தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு தீச்சட்டி ஊர்வலம், ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். ஏற்பாடுகளை தேவபாண்டலம் பர்வதராஜகுலத்தினர் செய்திருந்தனர்.