ராஜராஜேஸ்வரி கோவிலில் வளைகாப்பு உற்சவம்
ADDED :3352 days ago
பெ.நா.பாளையம் : ராஜராஜேஸ்வரி கோவிலில் வளைகாப்பு உற்சவம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில், ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று முன் தினம் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதில், ராஜராஜேஸ்வரி அம்மன் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். அம்மனுக்கு பல்வேறு தட்டுகளில் பழம் உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக படைக்கப்பட்டன. சிறப்பு பூஜைக்கு பின், சீர்வரிசை தட்டுகள் கோவிலைச் சுற்றி எடுத்து வரப்பட்டன. நிகழ்ச்சியில், குழந்தை இல்லாத பெண்கள், குழந்தை வரம் பெற சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.