அங்காளம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா
ADDED :3350 days ago
பள்ளிப்பட்டு: ராமச்சந்திராபுரம் அங்காளம்மன் கோவிலில், நேற்று, ஆடி பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளிப்பட்டு அடுத்த, ராமச்சந்திராபுரம், அங்காளம்மன் கோவிலில், நேற்று, ஆடி திருவிழா நடந்தது. காலை 9:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகமும், அலங்காரமும் நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனின் பிரசாதத்தை பெற்று கொண்டனர். பகல் 3:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டனர். மாலை 6:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.