உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடி வருமானம் கொட்டும் தாயமங்கலம் கோயிலில் தங்க தேர் இல்லை: பக்தர்கள் வேதனை!

கோடி வருமானம் கொட்டும் தாயமங்கலம் கோயிலில் தங்க தேர் இல்லை: பக்தர்கள் வேதனை!

இளையான்குடி: சிவகங்கை மாவட்டத்தில் பல கோயில்களில் தங்கத்தேரோட்டம் நடக்கும் நிலையில், ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வ ரும் முக்கிய கோயிலான தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் 300 ஆண்டுகளாக சட்டத்தேர் எனும் சிறிய சப்பரத்தில் தேரோட்டம்  நடக்கிறது. தங்கத்தேர் இல்லாததால் பக்தர்கள் வேதனைபடுகின்றனர்.  இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்  கோயில் உள்ளது. இங்கு செவ்வாய்,வெள்ளி,ஞாயிற்று கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பங்குனியில் பத்து நாட்கள்  நடக்கும் திருவிழாவில் பங்குனி 22ல் பொங்கல் விழா, மறுநாள் தேரோட்டம் முக்கிய திருவிழாகும்.

விழாவின் போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து நேர்த்தி கடன் செலுத்தி செல்வது வழக்கம்.  பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை பொருட்கள், உண்டியல் வருவாய் என ஆண்டுக்கு பல கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.   மாவட்டத்தில் இதே போல் வருமானம் வரக்கூடிய முக்கிய கோயில்களான கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், நாட்டரசன் ÷ காட்டை கண்ணுடைய நாயகி கோயில்களில் தங்கத்தேரோட்டம், வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது.  ஆனால் தாயமங்கலம் முத்துமாரியம்மன் ÷ காயிலில் பங்குனித் திருவிழாவின் போது தேரோட்டம் என்ற பெயரில் சிறிய சட்டத்தேரில் அம்மனை வைத்து பல ஆண்டுகளாக தேரோட்டம்  நடத்தப்படுகிறது. இவை பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. சிறிய சட்டத் தேருக்கு பதில் புதிய தேர் செய்து தேரோட்டம்  நடத்த கோயில்  நிர்வாகம், இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !