உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் விழாவில் பிரியாணி விருந்து

கோவில் விழாவில் பிரியாணி விருந்து

மணலி: மணலி, பெரிய தோப்பு பகுதியில் உள்ள, ஆயிரங்காத்தம்மன் கோவில் ஆடித் திருவிழாவில், 20வது வார்டு கவுன்சிலர், 1,000 பேருக்கு, பிரியாணி விருந்து வைத்தார். பெரிய தோப்பு பகுதியில், கிராமதேவி பிடாரி ஸ்ரீ ஆயிரங்காத்தம்மன் கோவில் உள்ளது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலில், ஆடி திருவிழா, நேற்று காலை நடைபெற்றது. காலை முதலே அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. பகல், 12:00 மணியளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின், மணலி, 20வது வார்டு கவுன்சிலர் ஏ.வி.ஆறுமுகம், கோவிலில் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தார். அதில், 1,000 பேருக்கு கோழி பிரியாணி வழங்கப்பட்டது. தலை வாழையிட்டு பரிமாறப்பட்ட பிரியாணியை, கோவிலுக்கு வந்திருந்தோர் ஒரு பிடி பிடித்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !