எறும்பீஸ்வரர் கோவிலில் சிவசக்தி லிங்கம்!
ADDED :3384 days ago
திருச்சி அருகிலுள்ள திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில், சிவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். பிளவுபட்ட இந்த லிங்கத்தின் வலதுபுறம் சிவ அம்சமாகவும், இடதுபுறம் அம்மன் அம்சமாகவும் இருப்பதால் சிவசக்தி லிங்கம் என்று சொல்வர். சிவனும், சக்தியும் ஒன்று என்பதை வலியுறுத்தும் விதத்தில் அமைந்த கோலம் இது. மணல் லிங்கமான இவருக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய்க் காப்பிட்டு பூஜை நடத்துகின்றனர்.