உபநயனம் என்னும் பூணூல் கல்யாணத்தை எந்த வயதில் நடத்த வேண்டும்?
ADDED :3384 days ago
கர்ப்பாஷ்டமேஷு ப்ராம்மணா: என்று ஒவ்வொரு சமுதாயத்திற்கான உபநயன வயது கூறப்பட்டுள்ளது. கர்ப்பத்தில் இருக்கும் காலத்தையும் ஒரு வயதாகக் கணக்கிட்டால் ஏழாவது வயதில் எட்டு வயதாகக் கணக்கிட்டு பூணூல் கல்யாணம் நிகழ்த்த வேண்டும். அதற்கு மேற்பட்டு வயது வரம்புகள் கூறப்படாததால் இதைப்பற்றி வழக்கில் உள்ளதையே ஏற்றுக் கொள்ள வேண்டியதாயுள்ளது. ஒற்றைப்படை வயதில் போடுவது என்பதும் வழக்கில் உள்ளது தான். அதாவது ஏழாவது வயதில் பூணூல் போடவேண்டும் என்பது கட்டாயம். இயலாதவர்கள் வழக்கில் உள்ளவைகளை பெரியவர்களைக் கலந்து செய்து கொள்ளலாம்.