உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆம்பூர் அருகே முட்புதரில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு!

ஆம்பூர் அருகே முட்புதரில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு!

வேலூர்: ஆம்பூர் அருகே சாலையோர முட்புதரில், ஐம்பொன் சுவாமி சிலை நேற்று கண்டெடுக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த  வெங்கிளி ஊராட்சியில், சாலையை தூய்மை செய்யும் பணியில், நேற்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு முட்புதரில் இரண்டு  அடி ஐம்பொன் சிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்த ஆம்பூர் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர்,  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின், அந்த சுவாமி சிலையை கைப்பற்றி, தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !