உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்கான் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

இஸ்கான் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு, இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இது குறித்து இஸ்கான் விழா ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.தாஸ் கூறியதாவது: சென்னை சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், ஆக., 24ம் தேதி மாலை, கிருஷ்ண யாகம் நடத்தப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று, காலை 7:30 மணி முதல் இரவு 12:00 மணி வரை, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7:00 மணிக்கு, சுதா ரகுநாதன் கர்நாடக இசை நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து ஜெயபாடக சுவாமியின் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கவிருக்கின்றன. கிருஷ்ண ஜெயந்தியன்று முக்கிய நிகழ்வாக, இரவு 10:30 மணி முதல் சிறப்பு சங்காபிஷேகம் நடத்தப்படுகின்றது. ஆக., 26ம் தேதி, இஸ்கான் அமைப்பின் தலைமை ஆச்சாரியர் ஸ்ரீல பிரபுபாதரின் அவதார திருநாள், நந்தோத்சவம் எனும் பெயரில் கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !