உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் வர்த்தந்தி மஹோத்ஸவம்

ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் வர்த்தந்தி மஹோத்ஸவம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நடு அக்ரஹாரம் ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில் சிருங்கேரி ஸ்ரீவிது சேகரபாரதி சுவாமிக்கு வர்த்தந்தி மஹோத்ஸவ விழா நடந்தது. அதிகாலை முதல் யாகபூஜைகள் நடந்தது. சுவாமிக்கு ஆயுஷ்ய ஹோமம் உள்ளிட்ட பல்வகை ஹோமங்களும், வேதபாராயணங்களும் நடந்தது. இதையொட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. மதுரை சிருங்கேரி மடத்தின் மேலாளர் விஸ்வநாதன் இலவச உதவிகளை வழங்கினார். பள்ளி காரியதரிசி ரெங்கசாமி தலைமை வகித்தார். தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். நிதிக்கமிட்டி தலைவர் அரிஹரகிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். வத்திராயிருப்பு சிருங்கேரி முத்திராதிகாரி சங்கரநாராயணன், முனைவர் ஜானகிராமன் இலவச பொருட்களை வழங்கினர். முனைவர் சத்யநாராயணன் நன்றி கூறினார். மடத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி கமிட்டி நிர்வாகிகள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !