உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவப்பு சாத்தி கோலத்தில் திருச்செந்தூர் சண்முகர் காட்சி!

சிவப்பு சாத்தி கோலத்தில் திருச்செந்தூர் சண்முகர் காட்சி!

 துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் முருகன் கோயிலில் நடந்து வரும் ஆவணி திருவிழாவில், நேற்று,சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில், தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்ததார்.முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்துாரில், 12 நாள் ஆவணி திருவிழா ஆக.,22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், ஏழாம் நாளான, நேற்று மாலை, 4:00 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில், சிவப்பு சாத்தி கோலத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை, சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !