பஞ்ச விருட்ச விநாயகர்!
ADDED :3344 days ago
மருதமலை முருகன் கோயிலில் பஞ்ச விருட்சத்தின் கீழ், பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கின்றார். இவரது ஐந்து முகங்களும் ஒரே வரிசையில் உள்ளது விசேஷம். பொதுவாக, அரச மரத்தடியில் காணப்படும் விநாயகர் இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் அமைந்துள்ளார். நடைப்பயணமாக மலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டித்தான் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்ல வேண்டும். ஆதிமூலஸ்தான முன்மண்டபத்துக்கும் தண்டாயுதபாணி சன்னிதி மண்டபத்துக்கும் இடையே இந்த பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதி உள்ளது.