10 ஆயிரம் தேங்காயில் விநாயகர் வடிவமைப்பு
ADDED :3351 days ago
திருப்பதி: திருப்பதி அடுத்த தும்மலகுண்டாவில், தேங்காய் விநாயகரை வடிவமைத்து, மக்கள் வழிபட்டனர். நாடு முழுவதும், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. திருப்பதி அடுத்த தும்மலகுண்டாவில் உள்ள, ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில், 10 ஆயிரம் முழு தேங்காயை பயன்படுத்தி, 40 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை மக்கள் வடிவமைத்தனர். இந்த விநாயகரை, மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருவதோடு, வழிபட்டும் செல்கின்றனர்.