உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தியையொட்டி தொரவி கோவிலில் சிறப்பு பூஜை

விநாயகர் சதுர்த்தியையொட்டி தொரவி கோவிலில் சிறப்பு பூஜை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி கிராமத்தில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாச நாதர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர் சந்தனம், பன்னீர் ஆகிய வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு அருகம்புல் மாலையுடன், சிறப்பு அலங்காரம் செய்து, 21 வகையான மூலிகைகள், மலர்களால் சிறப்பு அர்ச்சனை, இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். முன்னதாக, சிவனடியார் மாலதி தலைமையில் அர்ச்சனா, அமுதா, கோவிந்தராஜன் ஆகியோர் திருவாசகம் முற்றோதினர். தொரவி அ.தி.மு.க., நிர்வாகி சுப்பிரமணி, புதுச்சேரி மாநில காங்., மத்திய மாவட்ட காங்., முன்னாள் தலைவர் கண்ணன், பாலையா, ஞானபிரகாசம், வழக்கறிஞர் சம்பத், சர்க்கரை, ரவி, ஊராட்சித் தலைவர் நாகேஸ்வரி சங்கர், ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !