கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3356 days ago
மகுடஞ்சாவடி: சித்தர்கோவில் அருகே, கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சேலம் மாவட்டம், முருங்கப்பட்டி கிராமம், மேல்காடு அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோவிலில், இன்று காலை, 7.35 மணிக்கு மேல், 8.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நேற்று காலை, 6 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. சித்தர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவில் வரை நடந்து வந்தனர். நேற்று மாலை, 5 மணியளவில் நூற்றுக்கணக்கானோர் நாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து கோவில்வரை முளைப்பாரி எடுத்து வந்தனர்.