பென்னேஸ்வர மடம் கோவிலில் நிழற் கூடமின்றி பக்தர்கள் அவதி
ADDED :3399 days ago
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் இருந்து அகரம் செல்லும் சாலையில், பென்னேஸ்வர மடத்தில், நூற்றாண்டு கால பழமை வாய்ந்த பென்னேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமன்றி, பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில் அருகே, பக்தர்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை மற்றும் வெயிலில் திறந்த வெளியில் பக்தர்கள் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. இங்கு நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.