உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணார்பட்டி நாச்சாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சாணார்பட்டி நாச்சாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே சிக்கமநாயக்கர் மந்தை ஜக்கமநாயக்கன் பட்டியில் நாச்சாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த செப்.14ல் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து மங்கள இசையுடன் புண்ணிய தீர்த்தம் மற்றும் முளைப்பாரி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. அன்று மாலை முதற்கால யாக பூஜை மற்றும் வேள்விகள் நடந்தது.
இரவு தேவராட்டம், ஒயிலாட்டம், சேர்வையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !