உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கேதார கவுரி சிறப்பு பூஜை

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கேதார கவுரி சிறப்பு பூஜை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், கேதார கவுரி விரத சிறப்பு வழிபாடு நடந்தது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், சிவனும் பார்வதியும் ஒரு உருவமாக பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர். பார்வதிதேவி சிவபெருமானிடம் விரதம் இருந்து, இடது பாகத்தை பெற்றதாக ஐதீகம். இதற்கான கேதார கவுரி விரத வழிபாட்டு விழா, கடந்த, 9ம் தேதி துவங்கியது. புரட்டாசி மாத அமாவாசைக்கு முன் தினம், 21வது நாளாக வருமாறு கணக்கிட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அமாவாசைக்கு முன்தினம், ஆவாகணம் செய்யப்பட்டு, நாள்தோறும் பூஜை செய்யப்பட்டு வரும் கலசதீர்த்தம், கடலை தின்ற நந்தீஸ்வரர்க்கு தீர்த்தாபிஷேகம் செய்யபடும். வரும், 29ம் தேதி வரை, கேதாரகவுரி சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டு, மதியம் சிறப்பு தீபாரதனை நடத்தபடும். திருமணத்தடை நீங்கவும், குடும்ப ஒற்றுமை மேம்படவும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !