உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலில் ரூ.60.97 லட்சம் காணிக்கை

திருவண்ணாமலை கோவிலில் ரூ.60.97 லட்சம் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில், 60.97 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமியில் பல்வேறு பகுதியிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்திய உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன் படி, பவுர்ணமி முடிந்த நிலையில், நேற்று உண்டியல் காணிக்கை, கோவில் திருமண மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா தலைமையில், கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 60 லட்சத்து, 97 ஆயிரத்து, 597 ரூபாய், தங்கம், 220 கிராம், வெள்ளி, 640 கிராம் இருந்தது. பணத்தை வங்கியிலும், தங்கம், மற்றும் வெள்ளி நகைகளை கோவில் பெட்டகத்திலும் கணக்கில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !