பழநி திருஆவினன்குடி கோயிலில் கார்த்திகை பெருவிழா
ADDED :3343 days ago
பழநி, பழநியில் திருக்கார்த்திகை விழாவைமுன்னிட்டு திருஆவினன்குடிகோயிலில் பகல் 12:00 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வெள்ளிக் கவச அலங்காரம் மற்றும் தீபாரதனை நடந்தது. பழநிமலைக்கோயில் ஞானதண்டாயுத பாணிக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. மாலையில் 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. பெரியநாயகியம்மன்கோயில், திருஆவினன்குடிகோயில் இரவு 7 மணிக்குமேல் சுவாமி புறப்பாடு நடந்தது. தங்கரதப்புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.