அஷ்டலட்சுமி கோவிலில் நாளை நவராத்திரி துவக்கம்
ADDED :3315 days ago
சென்னை: பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில், நவராத்திரி விழா, அக்.,2 கோலாகலமாக துவங்குகிறது.
பெசன்ட் நகரில் உள்ள, அஷ்டலட்சுமி கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நவராத்திரி விழா, அக்.,2 துவங்கி, அக்., 11 வரை நடக்கிறது. விழாவின் ஒவ்வொரு நாளும், ஸ்ரீசுத்த ஆராதனையும், மாலை, 4:00 மணிக்கு லட்சுமிக்கு மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது. அதேபோல, உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாருக்கு, நவராத்திரி தொடர்பான, ஒன்பது கோலங்களில், உள்புறப்பாடும், ஊஞ்சல் சேவையும் நடக்கின்றன. விழாவின் கடைசி நாள், பார்வேட்டை வைபவம் நடக்கிறது.