திருமலையில் களைகட்டும் பிரமோத்சவம்
ADDED :3334 days ago
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம், 3ம் தேதி துவங்கியது. காலையும், மாலையும் மலையப்ப சுவாமி, மாடவீதிகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வருவது கண்கொள்ளா காட்சி. பிரம்மோற்சவத்தையொட்டி, மலர் அலங்காரத்தாலும், வண்ணமயமான விளக்குகளாலும் திருமலையே ஜொலிக்கிறது. மலையப்ப சுவாமியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.