உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கை மண்ணால் செய்த துர்க்கைக்கு சிறப்பு பூஜை

கங்கை மண்ணால் செய்த துர்க்கைக்கு சிறப்பு பூஜை

திருப்பூர் ;திருப்பூரில், கங்கை நதிக்கரை மண்ணால் வடிவமைக்கப்பட்ட துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டு, நவராத்திரி துர்கா பூஜைகள் நடந்து வருகின்றன. திருப்பூர், 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமிதி சார்பில், நவராத்திரி துர்க்கா பூஜைகள், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக, கங்கை ஆற்றின் கரையில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, விநாயகர், பிரம்மா, சிவன், விஷ்ணு, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, முருகன், அரக்கன் மகிஷாசுரன் ஆகியோரின் சிலைகள் செய்யப்பட்டு, மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, 7:30 மற்றும் இரவு, 7:30 மணிக்கு, சிறப்பு பூஜைகளும்; இரவு, 8:00 முதல், 10:00 வரை, பஜனையும்; இரவு முழுவதும், முழு இரவு பூஜைகளும் நடந்து வருகின்றன. குஷ்மண்டா தேவி பூஜை, ஸ்கந்த மாதா பூஜை ஆகியவை நடந்தன. இன்று, கார்த்தியாயினி தேவி பூஜை, நாளை, மகா காளி தேவி பூஜையும் நடைபெறவுள்ளது. வரும், 9ம் தேதி, மகா அஷ்டமி மகா கவுரி பூஜை; 10ம் தேதி, மகா நவமி சித்திதாத்ரி பூஜை; 11ம் தேதி, மகா தசமி விஸ்வகர்மா பூஜை நடைபெறவுள்ளது. வரும், 12ம் தேதி, மகா துர்க்கா தேவி விசர்ஜன பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !