/
கோயில்கள் செய்திகள் / பாண்டுரங்கா ஹரே... ஹரே... பண்டரிநாதா ஹரே... ஹரே... அதிகாலையில் வலம் வரும் பஜனை குழு
பாண்டுரங்கா ஹரே... ஹரே... பண்டரிநாதா ஹரே... ஹரே... அதிகாலையில் வலம் வரும் பஜனை குழு
ADDED :3325 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் அரங்கில் பூங்காவனம் சுவாமி தலைமையில் பாண்டுரங்கா பக்த சபை சார்பில் ஆன்மிக சேவை பயணம் 18 ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது.
புரட்டாசி மாதம் சனிதோறும் இக்குழுவின் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆர்மோனியம், தபேலா, கஞ்சிரா, ஜால்ரா சகிதமாக அதிகாலை 5:00 மணிக்கு பாண்டுரெங்கா ஹரே... ஹரே... பண்டரி நாதா ஹரே... ஹரே... என ஆடி, பாடி ஊர்வலமாக சென்று ஆன்மிகத்தை வளர்க்கிறது. பஜனை குழு நிர்வாகிகள் பூங்காவனம், சுந்தரராஜன் கூறியதாவது: ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, துர்க்காராம் விழா, மார்கழி, புரட்டாசி மாதங்களில் பஜனை மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்தப்படுகிறது. பஜனையில் பங்கேற்பதால் ஆத்ம திருப்தி கிடைக்கும். இறைப்பணியை பஜனை சேவை மூலம் நிறைவேற்றுவதே நோக்கம், என்றனர்.