உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமலாம்பாள் ரிக் வேத பாடசாலை காளியாகுடியில் இன்று துவக்கம்

கமலாம்பாள் ரிக் வேத பாடசாலை காளியாகுடியில் இன்று துவக்கம்

மயிலாடுதுறை: திருவாரூர் அருகே காளியாகுடியில், கமலாம்பாள் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், ரிக் வேத பாடசாலை இன்று துவக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடியை அடுத்த காளியாகுடி கிராமத்தில், காளிதேவி வழிபட்ட காளீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலின் அருகில், கமலாம்பாள் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில்,  விஜயதசமி நாளான இன்று, ரிக் வேத பாடசாலை, துவங்கப்படுகிறது. அதை முன்னிட்டு, நேற்று காலை முதல் ஆவஹந்தி ஹோமம் மற்றும் பூர்வாங்க  பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை, ராஜேஷ் மற்றும் கிருஷ்ணன் கனபாடிகள் தலைமையில் நடத்தினர். காளியாகுடி பெரிய பண்ணை மகாலிங்கம், நடராஜன் மற்றும் கமலாம்பாள் சாரிட்டபிள் டிரஸ்ட் ரவி நாராயணன், சுரேஷ் சுப்பிரமணியன், அட்வைசர் டாக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை, ‘மகா பெரியவரும், வேதமும்’ என்ற தலைப்பில் பூர்ணிமாவின் சொற்பொழிவு, ஹம்சபிரியாவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று, கணபதி ஹோமம், வேதாரம்பம், பாடசாலை துவக்க விழா நடைபெறுகிறது. பரனுார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள், ரிக் வேத பாடசாலையை துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !