கொடைக்கானலில் மழை வேண்டி மும்மத வழிபாடு
ADDED :3319 days ago
கொடைக்கானல், கொடைக்கானலில் மழை வேண்டியும், தொடர்ந்து பெய்யவும், குடிநீர் ஆதாரங்களில் நீர்மட்டம் உயரவும் நகராட்சி சார்பில் மும்மதங்களின் வழிபாடு நடந்தது. நகராட்சிக்குட்பட்ட ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட குடிநீர் தேக்கத்தில் நேற்று காலை இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகிய மூன்று மதத்தினரும் வழிபாடு நடத்தினர்.