பெருமாநல்லூரில் ரூ.10 லட்சம் காணிக்கை
ADDED :3319 days ago
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியலில், 10 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில், புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, செயல் அலுவலர் சங்கர சுந்தரரேசன் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், கோவில் ஊழியர்கள், திருப்பூர் மகா விஷ்ணு சேவா மையம் நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதில், பணமாக, ஒன்பது லட்சத்து, 93 ஆயிரத்து, 698 ரூபாய்; 155 கிராம் தங்கம்; 74 கிராம் வெள்ளி இருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.