பெங்களூருவில் இருந்து அம்மன் சிலை வருகை!
ADDED :3317 days ago
பல்லடம்: பல்லடம் அருகே பிரதிஷ்டை செய்வதற்காக, பெங்களூருவில் இருந்து ஸ்ரீலலிதாம்பிகை மற்றும் பரிகார தேவதைகளின் சிலைகள், நேற்று கொண்டு வரப்பட்டன. பல்லடம் கேத்தனூர் அருகேயுள்ள மந்திரிபாளையத்தில், ஆதிபராசக்தி பீடத்தில், ஸ்ரீலலிதாம்பிகை அம்மன் சிலை பிர திஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பெங்களூருவில் இருந்து ஸ்ரீலலிதாம்பிகை, கணபதி, முருகன், முனீஸ்வரன் சிலைகள் கொண்டு வரப்பட்டன. பெங்களூரு ஓம்சக்தி ஆலய நிர்வாகிகள், இலவச மாக சிலைகளை பிரதிஷ்டை செய்து தந்துள்ளனர். ஸ்ரீ வித்யா ஸ்ரீலலிதாம்பிகை கல்வி அறக்கட்டளை பீடாதிபதி, ஸ்ரீ வித்யா ஸ்ரீ லலிதா சுவாமிகள் இதில் பங்கேற்றார். கேத்தனூரில் இருந்து சிலைகள், வேனில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. மந்திரிபாளையம் கிராம மக்கள், சூடம், ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.